×

உலகளாவிய அளவில் தமிழ் அமைப்புகளை உருவாக்கி அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்: உலகத்தமிழ் மாநாட்டில் தீர்மானம்

சென்னை: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், ஆசியவியல் நிறுவனமும் இணைந்து சென்னை செம்மஞ்சேரியில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தின. 3 நாள் மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு, ஆசியவியல் நிறுவன இயக்குநர் ஜான் சாமுவேல் தலைமை வகித்தார். டாக்டர் பத்மினி வரவேற்றார். தமிழ்நாடு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், உலக தமிழ்ச்சங்க தலைவர் வி.ஜி.சந்தோஷம், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், காஞ்சிபுரம் முன்னாள் எம்பி விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.விழாவில், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ரஷ்யா, தென் கொரியா மற்றும் பல நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உலகளாவிய அளவில் தமிழ் அமைப்புகளை உருவாக்கி நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழ் நிறுவனங்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், பறை இசை, பிற நாட்டுப்புறக் கலைகள், சிலம்பாட்டம் ஆகியற்றுடன் சிலப்பதிகாரம் குறிக்கும் 11 வகை ஆடல்கள் குறித்த நாட்டிய நாடகமும் ‘உலகளாவிய தமிழ்’ என்னும் நாட்டிய நாடகமும் நடத்தப்பட்டன. மாநாட்டின் குறிப்பிடத்தகுந்த உலக சாதனையான சிறப்பு பேராளர்களின் 64 நூல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post உலகளாவிய அளவில் தமிழ் அமைப்புகளை உருவாக்கி அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்: உலகத்தமிழ் மாநாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : World Mil Conference ,Chennai ,World Tamil Research Institute ,Institute of Asiology ,11th World Tamil Research Conference ,Chennai Chemancheri ,Wide Tamil ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...